300-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு பிரியாணி போட்டு, தங்கத்தை பரிசாக கொடுத்த கலாநிதி மாறன்… கோலாகலமாக நடந்த ஜெயிலர் வெற்றி விழா…!!

By admin on செப்டம்பர் 11, 2023

Spread the love

கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

   

சுமார் 525 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், ஜெயில் படக்குழுவினருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கியுள்ளார்.

   

 

 

இன்று நடைபெற்ற ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர், தயாரிப்பாளர் பட குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது தயாரிப்பாளர் ஜெயிலர் திரைப்படத்தில் பணியாற்றிய 300-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார்.