“அந்த மனசு யாருக்கு வரும்”…. எந்த நடிகரும் செய்யாததை செய்த நடிகர் ஜெயராம்…. குவியும் பாராட்டுக்கள்…!!

By admin on புரட்டாதி 11, 2023

Spread the love

நடிகர் ஜெயராம் சுப்ரமணியம் பல மலையாள திரைப்படங்களிலும், ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பல குரல் கலைஞர் ஆவார். கடந்த 1992 ஆம் ஆண்டு கோகுலம் என்ற தமிழ் திரைப்படத்தில் ஜெயராம் அறிமுகம் ஆனார். நடிகர் ஜெயராம் சரோஜா, தாம் தூம், பஞ்சதந்திரம், பெரிய இடத்து மாப்பிள்ளை, அத்வைதம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

இந்நிலையில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மற்றும் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

   

 

இந்நிலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் கண் தானம் செய்வதற்கு ஒப்புதல் தெரிவித்து அதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டார். அவரை தொடர்ந்து பலரும் கண் தானம் செய்வதற்கான பத்திரத்தில் கையெழுத்து போட்டனர்.