உச்சகட்ட சம்பவம்..! ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோர் ADMK-வில் ஐக்கியம்… ஹேப்பி மோடில் எடப்பாடி..!!

By Soundarya on ஆடி 17, 2025

Spread the love

2026 சட்டமன்ற தேர்தல் களத்தை நோக்கி அரசியல் கட்சிகள் தங்களுடைய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்திட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர எடப்பாடி பழனிச்சாமியின் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக மார்க்சிஸ்ட் என மிகப் பெரிய பட்டாளமே உள்ளது. அதிமுகவில் பாமக, பாஜக, தாமக ஆகிய கட்சிகள் மட்டுமே இருக்கிறது. இதற்கிடையில் திமுகவை தொடர்ந்து அதிமுகவும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிதம்பரத்தில் இன்று “மக்களைக்_காப்போம், தமிழகத்தை_மீட்போம்” சுற்றுபயணம் மேற்கொண்ட இபிஸ் முன்னிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, காங்.,  மற்றும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளார்கள்.