தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே பலரும் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். அரசியல் தலைவர்கள் உட்பட சினிமா பிரபலங்களையும் இணைக்கும் முயற்சியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நத்தம் சட்டமன்ற தொகுதியை சார்ந்த பல்வேறு மாற்று கட்சியினர் கட்சியிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் வரவேற்றார்.
