பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் யோஜனா திட்டத்தின் கீழ் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அறுவது வயதிற்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியமாக 3000 ரூபாய் வழங்கப்படுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையோ வருங்கால வைப்பு நிதியோ ஓய்வூதிய சலுகையோ கிடையாது. அவர்கள் பயனடையும் நோக்கில் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அதற்கு சமமான தொகையை மத்திய அரசும் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யும். 18 வயதில் இந்த திட்டத்தில் சேர்ப்பவர்கள் 50 ரூபாய் செலுத்தினால் போதும். ஆனால் 44 வயதில் இந்த திட்டத்தில் சேர்ப்பவர்கள் 200 ரூபாய் செலுத்த வேண்டும். வயதை பொறுத்து டெபாசிட் தொகை மாறும். 60 வயதிலிருந்து மாதம் தோறும் இந்த திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
காய்கறி, பழ விற்பனையாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், செருப்பு தைப்பவர்கள், சலவை செய்பவர்கள், எலக்ட்ரீசியன்கள், தையல்காரர்கள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். PF, ESIC சலுகைகளை பெறுபவர்கள் அல்லது வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியற்றவர்கள். பொது சேவை மையத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் படிவத்தை நிரப்பி இந்த திட்டத்தில் சேர வேண்டும்.
