ஓய்வு காலத்தில் மாதம் மாதம் வருமானம் தரும் சூப்பரான பென்ஷன் திட்டம்.. பணப் பிரச்சனையே இருக்காது.. இதோ முழு விவரம்..!

By Nanthini on ஐப்பசி 18, 2024

Spread the love

ஒருவர் ஓய்வுக்கு பின்னர் தங்களின் வழக்கமான நிதியை இழந்து விடக்கூடாது என்பதற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. பெரும்பாலான மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பிறகு போதிய வருமானம் இல்லாமல் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால் அவர்களுக்காக தேசிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் மொத்த பணம் மட்டுமல்லாமல் ஓய்வூதியத்தையும் முதலீட்டாளர்கள் பெற முடியும். என்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் ஒருவர் தன்னுடைய பெயரில் அல்லது தனது துணையின் பெயரில் கணக்கை தொடங்கலாம். மாதம் 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யும்போது சுமார் 45 ஆயிரம் ரூபாய் தொகையை ஓய்வூதியமாக பெற முடியும்.

   

இதனால் நீங்கள் 60 வயதிற்கு பிறகு வழக்கமான வருமானத்தை இழக்காமல் இருக்க முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய மொத்த தொகையில் 60 சதவீதத்தை 60 வயதை கடந்த பிறகு மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். முதலீடு செய்யப்பட்ட தொகையில் குறைந்தபட்சம் 40 சதவீதம் தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்யப்படும். இதிலிருந்து சந்தை நிலவரத்தை பொறுத்து உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். நீங்கள் 30 வயதில் தொடங்கி தொடர்ந்து 60 வயது வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

   

 

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் 25 ஆண்டுகள் தொடர்ந்து டெபாசிட் செய்தால் மொத்த முதலீடு 45 லட்சம் ரூபாயாக இருக்கும். இதற்கு பத்து சதவீதம் வட்டியாக 1,55,68,356 ரூபாய் கிடைக்கும். 60 வயதை அடையும்போது மொத்த முதலீடுடன் வட்டியும் சேர்த்து மொத்தம் 2,00,68,356 ரூபாய் இருக்கும். இதில் நீங்கள் 60 சதவீதம் தொகையை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகையை முதலீட்டாளர்கள் பென்ஷன் ஆக பெற்றுக்கொள்ள முடியும். ஓய்வுக்குப் பிறகு ஒரு பெரிய தொகை கைக்கு கிடைக்கவும் 60 வயதுக்கு மேல் வழக்கமான வருமானத்தை இழக்காமல் இருக்கவும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.