இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெண் ஒருவர் வீட்டின் மேல் மாடியில் அமைதியாக அமர்ந்து யோகா செய்து கொண்டிருந்தபோது திடிரென்று ஒரு குரங்கு அங்கு வந்துள்ளது. அந்தக் குரங்கு அருகில் வந்து அந்த பெண்ணை கவனமாக பார்த்தது.
பிறகு அந்தப் பெண் ஒரு காலை நேராக மேலே தூக்கி நிலை நிறுத்தி இருந்ததால் அதையே பின்பற்ற முயன்ற குரங்கின் செயல் அனைவரையும் சிரிப்பில் உறைய வைத்தது. பெண் செய்த அதே நிலையில் தன்னை தக்க வைக்க குரங்கு முயன்ற சம்பவம் அருகில் இருந்த ஒருவரால் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். குரங்கு புதிய யோகா குரு ஆகப்போகுது என்ற பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்த வீடியோ பார்க்கும்போது பலருடைய மனதையும் இனிமையாக்கிறது.
Monkey with yoga.. 🐒😆 pic.twitter.com/CXVhb5gq2U
— Nature & Animals🌴 (@naturelife_ok) October 26, 2025
