பள்ளிக்கல்வித்துறை சார்பாக சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் அமைச்சர், ப்ளழிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகிழ்ச்சி உள்ளிட்டோர் பங்கு பெற்றார்கள். இதில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு 10,000 வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் கடந்த பொது தேர்வில் தமிழில் முழு மதிப்பெண்கள் பெற்ற 142 மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்
