ரோலக்ஸ் கேரக்டருக்கு தம்பி நீங்கதான்.. லோகேஷ் பெயரில் பிரபல நடிகர் மகனிடம் மோசடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

By admin on ஐப்பசி 8, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜன் படத்தில் நடிக்க  பலரும் ஆர்வமாக உள்ளனர். லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், மாநகரம் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியுள்ளார். அதனால்தான் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவுகளோடு பலர் வாய்ப்புகளை தேடி அலைகின்றனர். இதனை பயன்படுத்தி லோகேஷ் கனகராஜின் மானேஜர் என கூறி ஒருவர் பலரிடம் மோசடி செய்துள்ளார். அதில் ஒருவர் பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜியின் மகன் சஞ்சய் ராவ்.

   

தெலுங்கு நடிகரான சஞ்சய் ராவ் தனது சமூக வலைதளத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெயரில் மோசடி நடப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது லோகேஷ் கனகராஜின் மானேஜர் நடராஜர் அண்ணாதுரை என்று கூறி பேசும் ஒருவர், நீங்கள் லோகேஷ் இயக்கும் அடுத்த படத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். முன்னதாக காஸ்டியூமுக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும். ஆடிஷன் முடிந்தவுடன் அந்த தொகை திருப்பி வழங்கப்படும் என கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

   

 

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டருக்கு தம்பியாக நடிக்க வேண்டும், உங்கள் புகைப்படங்களை அனுப்புங்கள் என கூறி அந்த நபர் சஞ்சய் ரவை ஏமாற்றியுள்ளார். அவர் கூறியதை நம்பி சஞ்சய் ராவ் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு சம்மந்தப்பட்ட நபரின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டது சஞ்சய் ராவுக்கு தெரியவந்தது. எனவே மோசடி நபரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என சஞ்சய் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.