மக்களே உஷார்…! வாட்ஸ்அப் மெசேஜ் நம்புனா இதுதான் கதி…! கோடிகளை இழந்த சென்னை பிசினஸ்மேன்… போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on தை 12, 2026

Spread the love

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேந்திரன், வாட்ஸ்அப் மூலம் வந்த ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தை நம்பி 1.23 கோடி ரூபாயை இழந்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தபோது அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைத்துள்ளது.  இந்த இதனால் அடுத்தடுத்து பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். இறுதியில் மொத்தப் பணத்தையும் மோசடி கும்பல் அபகரித்த நிலையில், இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதேபோல் ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவரிடம் 6.58 கோடி ரூபாய் சுருட்டிய கும்பலையும் சேர்த்து மொத்தம் 11 பேரைத் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். சிறிய லாபத்தைக் காட்டி பெரிய முதலீடுகளைக் குறிவைக்கும் இத்தகைய ஆன்லைன் மோசடி வலைதளங்கள் குறித்துப் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.