“ஹெல்ப்லைனுக்கு கூப்பிட்டா ஓகே சார்னு சொல்றாங்க…” ரயில்வே துறையின் அலட்சியத்தால் தவித்த பெண்…! பணம், செல்போன் எல்லாம் போச்சு… சமூக வலைத்தளங்களில் வெடிக்கும் காரசார விவாதம்…!!

By Devi Ramu on புரட்டாதி 6, 2026

Spread the love

போபாலில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்ற ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில், பச்சை நிற உடை அணிந்த பெண் ஒருவர் நள்ளிரவில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணி அளவில், அந்தப் பெண்ணின் பையில் இருந்த ரூ.10,000 ரொக்கப் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பதறிப்போன அந்தப் பெண் உடனடியாக ரயில்வே உதவி எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். ஆனால், மறுமுனையில் பேசியவர்கள் வெறும் “ஓகே சார்… ஓகே சார்…” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

பலமுறை போன் செய்து கோபப்பட்ட பிறகே போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து புகாரைப் பெற்றுக்கொண்டு சென்றுள்ளார். ஆனால், திருடப்பட்ட செல்போனைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ரயில்வே ஊழியர்களிடம் முறையிட்டும் எந்தப் பலனும் கிடைக்காததால் பயணிகள் அனைவரும் வேதனையடைந்தனர். இரவில் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே நிர்வாகம் காட்டும் இந்த அலட்சியம் இணையத்தில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.