இதுவரை உலகில் மனிதன் வரைந்ததிலேயே மிகச் சிறந்த ஒவியம்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றது மோனாலிசா ஓவியம். அந்த மகத்தான ஒவியத்தை வரைந்தவர் இத்தாலியைச் சேர்ந்த லியான்ட்ரோ டாவின்சி. இவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லபடுகிறது. சிலர், டாவின்சி ஒரு ஏலியன், வேற்று கிரகத்துடன் தொடர்பு வைத்திருந்தவர், அவருக்கு இடது பக்க மூளையும், வலது பக்க மூளையும் இணைக்கும் நரம்பு மிகவும் அடர்த்தியாக இருந்தது, அவர் எதிர்காலத்தில் இருந்து வந்தவர் என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட மர்மங்களும், முடிச்சுக்களும் கொண்ட மோனாலிசா ஓவியம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. லியோனார்டோ டாவின்சி வரைந்த இந்த மோனலிசா ஓவியம் எவ்வளவு பிரபலமானதோ, அவ்வளவு சர்ச்சைகளும் நிறைந்தது.
உலக விஞ்ஞானிகளுக்கே டாட்டா காட்டிய இந்தியாவின் எடிசன்.. யார் இந்த ஜி.டி.நாயுடு?
இந்த ஓவியத்தில் லிசா ஜெரால்டினி என்னும் பெண்ணைத்தான் டாவின்சி வரைந்ததாகக் கருதப்படுகிறது. இவர் ஒரு பணக்கார பட்டு வணிகரின் மனைவி, அவர்களுக்கு இரண்டாவதாக ஒரு மகன் பிறந்ததாகவும், அந்த மகனின் பிறப்பைக் கொண்டாடும் பொருட்டு அந்த வணிகர் தனது மனைவியின் படத்தை ஒரு புகைப்படமாக வரைந்து தரும்படி டாவின்சியிடம் கூறியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்த ஓவியத்திற்கு மோனாலிசா என்பது பெயர் வரக் காரணம் இதுதான்.
பெயரில் உள்ள மோனா என்பது மடோனாவின் சுருக்கமாகும். மடோனா என்ற இத்தாலிய வார்த்தைக்கு மை லேடி (My lady) என்பது பொருள். அடுத்து பெயரில் வரும் லிசா, லிசா ஜெரால்டினியின் முதல் பெயர். இரண்டையும் இணைத்து இந்த ஓவியம் மோனலிசா எனப் பெயர்பெற்றது. ஆங்கிலத்தில் மை லேடி லிசா (My lady lisa) என்பது பொருள்.
ஓவியத்தில் அடங்கியுள்ள மர்மங்கள்
இந்த ஓவியத்தை எந்தப்பக்கத்திலிருந்து பார்த்தாலும், பார்ப்பவரை ஓவியத்தின் கண்கள் பார்ப்பதுபோல ஒரு உணர்வு தோன்றும். மேலும் இந்த ஓவியத்தின் கண்களுக்குள் LVஎன்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்பதும்,அதற்கான காரணம் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.
ராமகிருஷ்ண பரமஹம்சரை சோதித்துப் பார்த்த சுவாமி விவேகானந்தர்.. துறவியாக என்ட்ரி கொடுத்த அற்புத தருணம்
இந்த ஓவியத்தின் பின்புறத்தில் உள்ள இயற்கைக் காட்சிகளுக்குள் நுணுக்கமான முறையில் இத்தாலிய வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாது இந்த ஓவியத்தில் ஏலியன்கள் முகத்தோற்றம் தென்படுவதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக ஓவியத்தில் வரையப்பட்டுள்ள உருவம் ஒரு பெண்ணே அல்ல என்னும் கருத்தும் நிலவி வருகிறது.
விலைமதிப்பற்ற இந்த ஓவியத்தை இன்று ஏலத்திற்கு விட்டால் கூட சுமார் 5000 கோடிக்கு ஏலம் போகுமாம்.