தென்னிந்திய திரையுலகில் பல மொழி படங்களில் நாயகனாகவும், புகழ்பெற்ற நடிகர்களின் தந்தையாகவும் நடித்து பிரபலமான மோகன் சர்மா, தற்போது கும்மிடிப்பூண்டி அடுத்த நந்தியம்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வறுமை காரணமாக தஞ்சம் புகுந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போயஸ் கார்டனில் சொகுசாக வாழ்ந்த இவர், தான் தயாரித்த ‘நம்ம கிராமம்’ படத்துக்காக வாங்கிய கடன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் அனைத்து சொத்துக்களையும் இழந்துள்ளார். கைவசம் பணமின்றி, மாத்திரை வாங்கக்கூட வழியின்றித் தவித்த இவருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வங்கி விவரங்களைப் பெற்று ஒரு லட்சம் ரூபாய் வழங்கி மனிதாபிமானத்துடன் உதவியுள்ளார்.
தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் வறுமையாலும் உடல்நலக் குறைவாலும் அவதிப்படும் மோகன் சர்மா, தனது படத்தின் சேட்டிலைட் உரிமையை விற்று மீதமுள்ள காலத்தைக் கழிக்க விரும்புகிறார். மேலும், தமிழ்த் திரையுலகின் தற்போதைய முதல்வரான விஜய்யை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கோரியுள்ள இவர், தனக்கு மீண்டும் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும், கலை உலகினர் தனக்குத் தகுந்த உதவிகள் செய்து கைதூக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…