“விஜய்க்கு guts தான்பா”.. “ஒரே நிறம்.. ஒரே கார்.. திரிஷாவுடன் விஜய் கொடுத்த அதிரடி என்ட்ரி”… இயக்குனர் மோகன் ஜி போட்ட போஸ்ட்….!

By Nanthini on பங்குனி 6, 2026

Spread the love

சென்னையில் நடைபெற்ற கல்பாத்தி சுரேஷின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில், நடிகர் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒரே காரில், ஒரே நிறத்திலான ஆடைகள் அணிந்து வந்திருந்தது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் தோன்றாத இவர்கள், தற்போது ஒரே சீருடையில் வந்தது ரசிகர்களிடையேயும் திரையுலகினரிடையேயும் பலத்த ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகளும், குறிப்பாக அவரது மனைவி சங்கீதாவுடன் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் கூறப்பட்டு வரும் சூழலில், இந்த வருகை அந்த வதந்திகளுக்கு விடை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பேசப்படுகிறது. பொதுவெளியில் இவர்கள் ஒன்றாகத் தோன்றியது, தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு விஜய் தனது பாணியிலேயே பதில் அளித்திருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

   

இயக்குநர் மோகன் ஜி, விஜய்யின் இந்தச் செயலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். விஜய் எதற்கும் அஞ்சாமல், தனது துணிச்சலை வெளிப்படுத்தும் விதமாகவே திரிஷாவுடன் இணைந்து வந்ததாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த ஆதரவுக் கருத்து, விஜய் தரப்புக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

   

இருப்பினும், விஜய்யின் இந்தச் செயல் அனைவராலும் வரவேற்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர், திருமணமாகி குடும்பத்தோடு இருக்கும் நிலையில் ஒரு நடிகையுடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சரியல்ல என்று விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எப்படியிருப்பினும், விஜய்யின் இந்த வருகை தற்போது திரையுலகின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.