கிளம்பிய அடுத்த புயல்..! “டபுள் கேம் ஆடும் ராகுல்..?” முகமது சுபேரின் பரபரப்பு பதிவால் வெடித்த புதிய சர்ச்சை..!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

ஆல்ட் நியூஸ் (Alt News) இணை நிறுவனர் முகமது சுபேர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து ஒரு விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார். ஜெய்ப்பூர் காங்கிரஸ் தலைவராக சுனில் சர்மா என்பவர் நியமிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய சுபேர், அவர் முன்பு காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கிண்டல் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்த ‘ஜெய்ப்பூர் டயலாக்ஸ்’ (Jaipur Dialogues) அமைப்பின் இயக்குநராக இருந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நபர்களுக்குப் பதவி வழங்குவது ராகுல் காந்தியின் ‘டபுள் கேம்’ (இருவேட அரசியல்) என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்கள் மற்றும் ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை குறித்த விவாதங்களை இது மீண்டும் தூண்டியுள்ளது. ஒருபுறம் பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் தங்களை விமர்சித்தவர்களுக்கே பதவி வழங்குவது முரணானது என்று சுபேரின் இந்த விமர்சனம் அமைகிறது.