BREAKING: இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் கட்டணம் குறைகிறது… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்களைக் குறைக்க இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய பரிந்துரையை வழங்கியுள்ளது. குறிப்பாக, மொபைல் டேட்டா பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்காக, அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை மட்டும் கொண்ட குறைந்த விலை சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை (STV) அறிமுகப்படுத்துமாறு ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு TRAI அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்போதைய ரீசார்ஜ் விலையை விட சுமார் 40 முதல் 60 ரூபாய் வரை கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் இணைய வசதி தேவைப்படாத, பட்டன் போன் பயன்படுத்தும் லட்சக்கணக்கான சாமானிய மக்கள் மற்றும் முதியவர்கள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.