இடிமேல் இடி விழும் அதிமுக… அதிமுகவில் அடுத்த விக்கெட்?… EPS கூட்டத்தை புறக்கணித்த முக்கிய புள்ளிகள்…அதிமுகவில் தொடரும் நிலநடுக்கம்…!

By Visaka on ஆடி 7, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் வேளையில், அக்கட்சியின் முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் (சுகுமார்) இக்கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்த நிலையில், அவரைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியும் இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார்.

அண்மைக்காலமாக அதிமுகவின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் சூழலில், இந்த இரு முக்கிய நிர்வாகிகளின் அடுத்தடுத்த புறக்கணிப்பு அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களையும் உற்றுநோக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.