“கருவறைக்கு போகணும்…. கோவிலில் அராஜகம்”…. பெண் அதிகாரியை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. மகள்…. ஷாக்கிங் வீடியோ….!

Spread the love

கர்நாடக மாநிலத்தில் கோவில் தரிசனத்தின் போது, பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகள் பெண் காவல் அதிகாரியை கன்னத்தில் அறைந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே உள்ள ஆரத்தி உக்கடா கோவிலில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல் உதவி ஆய்வாளர் சவிதா பி. பாட்டில் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்நேரத்தில், துமகூரு ஊரகத் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பி. சுரேஷ் கவுடாவின் மகள் ஐஸ்வர்யா விஐபி வரிசையில் தரிசனத்திற்காக வந்துள்ளார். கருவறைக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் சவிதாவிடம் அவர் கோரியுள்ளார். அதற்கு சவிதா மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, சற்றும் எதிர்பாராத விதமாக பெண் அதிகாரி சவிதாவின் கன்னத்தில் அறைந்தார். உடனடியாக அந்த பெண் அதிகாரியும் பதிலுக்கு அவரை அறைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த மோதலைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர், பணி செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய ஐஸ்வர்யா மீது உதவி ஆய்வாளர் சவிதா க்யாத்தனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மற்றொரு காவல் அதிகாரியைக் கருவறைக்குள் அனுமதித்த சவிதா, தான் ஒரு எம்.எல்.ஏ-வின் மகள் எனக் கூறியும் தன்னைக் கருவறைக்குச் செல்ல அனுமதிக்காததே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தனது மகளின் செயலுக்கு எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடா வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். கோவிலுக்கு அனைவரும் அமைதியை நாடியே செல்கின்றனர் என்றும், அதேவேளையில் தனது மகளைப் பெண் அதிகாரி வாய்மொழியாகத் திட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“கனவாக மாறிய 10 வருட காதல்…” வேலை கிடைத்த திமிரில் காதலியை தூக்கி எறிந்த வாலிபர்…. இளம்பெண்ணின் முடிவால் கதறும் குடும்பத்தினர்… பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…

13 minutes ago

பெற்ற தாய் செய்யுற வேலையா இது…? சிறுமி மீது கைவைத்த கள்ளக்காதலன்…. மகள் அழுதும் கேட்காத தாய்… நெஞ்சை ரணமாக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வரும் சாரதா என்ற பெண்ணுக்கு, மேடிப்பள்ளியைச் சேர்ந்த மாலோத் ரவி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…

21 minutes ago

தந்தை-மகனுக்கு பொருந்தாத DNA…! வெளிச்சத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவம்… இரத்த புற்றுநோய் சிகிச்சையில் வெளிவந்த பகீர் ரகசியம்…!

குஜராத் மாநிலம் மோர்பி நகராட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்துள்ளார். அவருக்கு…

29 minutes ago

“பாத்ரூம் போகணும் சார்…” உள்ளே சென்ற கைதி… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ,,,!!

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஆத்மகூர் மண்டலம் அமரசிந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் ரெட்டி. இவர் குற்ற வழக்கு ஒன்றில்…

43 minutes ago

“பெண்கள்னு கூட பார்க்கல…” மீன், காய்கறிகளை தூக்கி வீசி தாக்கிய அதிகாரி…. நண்பருடன் சாதி பெயரை சொல்லி ரகளை…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் எல்லார்ப்பூர் தாலுகா மஞ்சிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பண்டார்கர். இவர் பைந்தூர் டவுன்…

57 minutes ago