கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ, ஒன்றிய திமுகவை தலைவரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய திமுகவை தலைவராக இருந்து வரும் முனிவேல் திமுக சார்பில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் திமுக நிர்வாகிகளை அழைக்காமல் முன்னாள் மாவட்ட செயலாளரான திமுக எம்எல்ஏ வை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்தியதாக தெரிகிறது. கட்சி நிர்வாகிகளை அழைக்காமல் நிகழ்ச்சி நடத்துவது ஏன் என்று ஒன்றிய அவை தலைவர் முனிவேல், ஒன்றிய செயலாளர் சக்திவேலிடம் முறையிட்டுள்ளார்.
அதன் பிறகு கட்சி நிர்வாகிகள் இனி அனைவரையும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் கோல போட்டி நடைபெற்றது. இந்த கோலம் போட்டியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் ரமேஷ் ராஜ், கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ கோவிந்தராஜியோர் கலந்து கொண்டனர்.
அப்போது திமுக எம்எல்ஏ கோவிந்தராஜன் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடர்பாக ஒன்றிய செயலாளர் இடம் முறையிட்ட அவைத்தலைவர் முனிவேலை கண்டித்து கன்னத்தில் அறைந்து தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் முன்னாள் மாவட்ட செயலாளரும் திமுக எம்எல்ஏவும் ஆன கோவிந்தராஜன் கட்சி நிர்வாகிகளை முகத்தில் அறைந்து தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
திமுக ஒன்றிய அவைத்தலைவர் முனிவேலின் கன்னத்தில் ஓங்கி அறைந்த எம்.எல்.ஏ கோவிந்தராஜன்!
‘கொள்கை பிடிப்புள்ள கட்சி’, ‘அரசியல்படுத்தப்பட்ட இயக்கம்’ என மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் உண்மை முகம் இதுவே. தலைமை முதல் கிளை வரை, அனைத்து மட்டத்திலும் திமிரும், அடக்குமுறையும், சாதிய வன்மமும் pic.twitter.com/i9unmuduTK
— R.PALANINATHAN (@palaninathan_r) January 5, 2026
