BREAKING: திமுகவில் இருந்து MLA விலகுகிறார்… சம்பவம் செய்த விஜய்…. செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on சித்திரை 5, 2026

Spread the love

ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இம்முறை சண்முகையாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான ராமஜெயம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, நேற்று நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலினின் நிகழ்ச்சியைப் புறக்கணித்த சண்முகையா, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சண்முகையாவின் இந்த முடிவு தூத்துக்குடி மாவட்ட அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.