விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், சமீபத்தில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் விஜயை மிகவும் அவதூறாகவும், “சட்டமன்றத்தைப் பூட்டி விடுவாயா? உன் எலும்புகளை உடைத்து விடுவேன்” என்று மிரட்டும் தொனியிலும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து எம்.எல்.ஏ மார்க்கண்டேயனைக் கைது செய்தனர். தந்தையின் கைதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரது மகன், ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, பின்னர் “முதல்வர் அவர்களே… நீங்கள்தான் உங்கள் மகனுடன் இல்லை; ஆனால் என் அப்பா என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்” என முதலமைச்சர் விஜயைத் தாக்கிப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆனால், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இணையத்தில் வெளியான மற்றொரு வீடியோ ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு எதிராக இந்த மகனே முழக்கமிட்டதால், காவல்துறையினர் அவரது வாயைப் பொத்தி இழுத்துச் சென்று கைது செய்த பழைய காட்சிகள்தான் அவை. தங்களை விமர்சித்த நபரின் பழைய வரலாற்றைத் தோண்டியெடுத்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஐடி விங், அந்த வீடியோவைப் பகிர்ந்து “மச்சி இவன்டா!” என நக்கலடித்து இணையத்தில் பெரிய அளவில் ட்ரோல் செய்து வருகிறது.
https://www.instagram.com/reel/DbCuq3zJJqr/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
