காலையிலேயே குட் நியூஸ்… அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை படியை மூன்று சதவீதம் உயர்த்தி ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி டிசம்பர் மாதத்தில் 5 மாத அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்கப்படும். இதன் மூலமாக 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.