திமுகவின் ‘பவர் ஷேரிங்’ பார்முலா… காங்கிரஸுக்கு ஸ்டாலின் கொடுத்த அந்த ஒரு ‘சீக்ரெட்’ ப்ராமிஸ்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

By Nanthini on மாசி 21, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, தமிழக அமைச்சரவையில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தரப்பு முன்வைத்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசியல் சூழலில் ‘ஆட்சியில் பங்கு’ என்பது சாத்தியமில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இந்த விவகாரம் காங்கிரஸ் மேலிடத்தின் கவனத்திற்குச் சென்றது.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் திமுகவுடன் இணைந்து பயணிப்பதே கட்சிக்கு வலுசேர்க்கும் என அவர்கள் முடிவெடுத்ததாகத் தெரிகிறது. அமைச்சரவையில் இடம் கிடைக்காவிட்டாலும், கூட்டணியைத் தொடர்வதே சிறந்தது என்ற கருத்தை சோனியா காந்தி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, காங்கிரஸின் பிடிவாதம் தளர்ந்தது.

   

இந்தச் சிக்கலைத் தீர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளார். அமைச்சரவையில் இடம் அளிப்பதற்குப் பதிலாக, ‘அதிகாரத்தில் பங்கு’ வழங்கும் வகையில் அரசு வழக்கறிஞர்கள், கூட்டுறவு சங்கப் பதவிகள் மற்றும் அரசு வாரியத் தலைவர் பதவிகளில் காங்கிரஸிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஸ்டாலினின் இந்த இராஜதந்திர நகர்வை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, திமுக – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்பாடு எட்டப்பட்ட பின்னரே தேமுதிக போன்ற கட்சிகளும் திமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.