தற்போதைய காலத்தில் அனைவருமே எதுக்கெடுத்தாலும் மருத்துவமனையை அணுகுகிறோம். ஆனால் முன்னொரு காலத்தில் அனைத்து நோய்களுக்குமே வீட்டு வைத்தியத்தை தான் முதலில் அணுகுவார்கள். வீட்டிலேயே சில நோய்களுக்கு வைத்தியம் செய்யலாம் அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. சளி தொல்லை இருக்கும் போது தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து வெதுவெதுப்பாக சுடவைத்து கை பொறுக்க சூட்டில் நின்று தடவி வந்தால் சளி குணமாகும்.
2. தீராத தலைவலிக்கு துளசி இலை, சிறு துண்டு சுக்கு, இரண்டு லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு இருக்கும்போது சுக்கு, பால், மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டையில் ஏற்பட்ட கரகரப்பு குணமாகும்.
4. விக்கல் நிற்காமல் வந்து கொண்டே இருந்தால் நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து பருகினால் விக்கல் நின்றுவிடும்.
5. அஜீரணக் கோளாறு இருக்கும்போது ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை இஞ்சி சீரகம் ஆகியவற்றை கொதிக்க வைத்து வடிகட்டி ஆரிய பின் குடித்தால் அஜீரணம் சரியாகும்.
6. உடல் உஷ்ணம் இருக்கும் போது சீரகத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
7. வாய்வுத் தொல்லை இருந்தால் வேப்பம்பூவை காயவைத்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
8. வயிற்று வலி வரும்போது வெந்தயத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் எவ்வளவு பெரிய வயிற்று வலியாக இருந்தாலும் ஓடிவிடும்.
9. தோல் நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு பழதோலை காய வைத்து பொடி செய்து சருமத்தில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் விரைவாக குணமாகும்.
10.மூக்கடைப்பு இருக்கும்போது சிறு துண்டு மஞ்சளை விளக்கில் சுட்டு அதனுடைய புகையை மூக்கில் முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் புத்துணர்ச்சி பெறும்.
