நடுக்கடலில் கோரச் சம்பவம்… உக்ரைனில் இந்தியக் கப்பல் மீது ஏவுகணை வீச்சு…! 4 இந்தியர்கள் உயிரிழப்பு… ஒருவர் உயிருக்குப் போராட்டம்…! பதறவைக்கும் துயரம்…!!

By Swetha on ஆடி 21, 2026

Spread the love

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றிச் சென்ற ‘எம்.வி. கோல்டன் லியோ’ என்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அதில் பயணித்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜூலை 19 மாலை நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, கினியா-பிசாவ் நாட்டின் கொடியுடன் பயணித்த இக்கப்பலில் 5 இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 மாலுமிகள் இருந்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்தியாவின் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் , உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளதுடன், காயமடைந்தவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மேலும், வணிகக் கப்பல்களை இலக்கு வைப்பதும், அப்பாவி மாலுமிகளின் உயிரைப் ஆபத்தில் ஆழ்த்துவதும் கண்டிக்கத்தக்கது என இந்திய அரசு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

   

உக்ரைன் கடற்படையின் கூற்றுப்படி, ரஷியாவின் ஏவுகணைகள் இக்கப்பலின் மீது தாக்குதல் நடத்தியதில் கப்பலில் தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எம்.வி. கோல்டன் லியோ கப்பல் மும்பையைச் சேர்ந்த ‘ஓஷன் கிரேஸ் ஷிப்பிங் லிமிடெட்’ என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. கருங்கடல் பிராந்தியத்தில் தொடரும் மோதல்களால் சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்தும் மாலுமிகளின் பாதுகாப்பும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.