அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி செய்யும் அனைவருக்கும் தொழிலாளர் வைப்பு நிதி என்கிற பிஎஃப் திட்டம் கட்டாயமாகும். இதுதான் அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் காலத்தில் மிகப்பெரிய ஒரு தொகையாக அவர்களுக்கு கிடைக்கிறது. சமீபத்திய தொழிலாளர் தீர்த்தங்களுக்கு பிறகு அனைவருக்கும் பிஎஃப் கணக்கு அவசியமாகிவிட்டது. அதனால் பிஃஎப் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்துக் கொள்வதும் முக்கியமானதாக உள்ளது.
அதற்கா மிஸ்டு கால் எஸ்எம்எஸ் அல்லது செயலி மூலமாகவும் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். இதில் மிஸ்டு கால் சேவை மிகவும் எளிதானது. உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். இரண்டு ரிங் ஆனவுடன் அழைப்பு தானாக துண்டிக்கப்படும். அதன்பிறகு உங்கள் பிஎஃப் பேலன்ஸ் விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் உங்கள் மொபைல் போனுக்கு வந்து சேரும். இதுவே மிகவும் வேகமான எளிதான முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
