தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ, அதேபோல சின்னத்திரையில் நடித்துவரும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு இருந்து வருகிறது.

இவர்களுக்கென்றும் தனி ரசிகர்கள் பட்டாளமே காணப்படுகின்றனர். தற்பொழுது சின்னத்திரை நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் கால்பதித்து கலக்கி வருகின்றனர்.


இவர்களில் பலர் தற்பொழுது முன்னணி நடிகைகளாகவும் மாறி வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர்.

பொதுவாக அழகான பெண்களுக்காக அழகிப்போட்டி நடைபெறுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இது மாநில அளவில், உலக அளவில் என பல கட்டங்களாக நடைபெற்று அழகிகள் தேர்ந்தெடுக்கபட்டு கெளரவிக்கப்படுகின்றனர்.

தற்பொழுது சீரியல் நடிகைகளுக்குள் அழகிப்போட்டி நடைபெற்றது உங்களுக்கு தெரியுமா?. ஆம் 2010ல் vivel miss chinththirai என்ற பெயரில் சென்னையில் இந்த அழகிப்போட்டி நடைபெற்றுள்ளது.


இந்த அழகி போட்டியில் தேவிப்பிரியா, மோனிகா, விலாசினி, லாவண்யா, ஸ்வேதா, காயத்ரி, அன்னபூரணி, ரஜினி போன்ற பல பிரபல சீரியல் நடிகைகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களில் பிரபல சீரியல் நடிகையான ஸ்வேதா முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை சீரியல் நடிகை தேவிப்பிரியாவும் பிடித்துள்ளனர் .


தற்பொழுது 2010 இல் நடைபெற்ற இந்த மிஸ் சின்னத்திரை அழகி போட்டி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

