அப்போ சிவகார்த்திகேயன்.. இப்போ இவரா..? பிரபல ஹீரோவின் மார்க்கெட்டை காலி பண்ண பார்க்கும் மிஸ்கின்..!!

By admin on ஆடி 24, 2024

Spread the love

இயக்குனர் பாண்டிராஜ் பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் சூர்யாவை வைத்து கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்கிய எதற்கும் துணிந்தவன் படம் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் பாண்டி ராஜ் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | Nithya Menon joining vijay sethupathi

   

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்காக விஜய் சேதுபதி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் மலையாள நடிகையான நித்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். குடும்ப இண்டிமெண்ட்டை மையமாக வைத்து படம் உருவாக்க உள்ளது.

   

Mysskin And Vijay Sethupathi - பாலிவுட் மோகத்தால் டீலில் விட்டாரா விஜய் சேதுபதி? மிஷ்கினின் திட்டம் இதுதானா? | Vijay Sethupathi left director Mishkin out of the deal due to the ...

 

இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே அந்த படத்தில் டிஸ்க்ஷனில் கூட தனது பங்கு இருக்க வேண்டும் என மிஸ்கின் நினைக்கிறாராம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலும் மிஸ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Director Mysskin shared latest update about Maaveeran:

ஆனால் நடிப்பை தாண்டி இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு ஐடியா கொடுப்பதாக கூறி மிஷ்கின் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டாராம். இதனால் மிஷ்கினை வைத்து அடுத்த படமே இயக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இயக்குனர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதே போல விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே மிஷ்கின் இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளார். மாவீரன் படத்தைப் போல இந்த படத்திலும் மிஷ்கின் என்ன செய்யப் போகிறாரோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மிஸ்கின் (Mysskin): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil