கடந்த மார்ச் 23-ஆம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள வாலென்சியா பகுதியில் அமைந்துள்ள ஹோல் ஃபுட்ஸ் (Whole Foods) அங்காடியில் பெண் ஒருவர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அப்பெண்ணிடம் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டதோடு, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அந்த நபர் தனது உடைகளைக் களைந்து விகாரமாக நடந்துகொண்டதுடன், பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகத் தவறான முறையில் அவரைத் தொட்டுத் துன்புறுத்தியுள்ளார்.
🇺🇸 A man was caught on camera inside a Southern California Whole Foods allegedly pulling down his pants and pressing his genitals against a woman’s ear.
Absolute insanity.
I hope they find this pervert quickly and lock him up.https://t.co/VbICJmznRn
— Mario Nawfal (@MarioNawfal) March 30, 2026
இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையினர் (LASD) சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்கு முன்பாகவே, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், அந்த நபர் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும், தாடி வைத்துக்கொண்டு டெனிம் சட்டை மற்றும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது தலைமறைவாக உள்ள அந்த நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொது இடத்தில் நடந்த இந்த துணிகரமான பாலியல் குற்றத்தைக் கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அந்த நபர் குறித்த தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாகத் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அங்காடி நிர்வாகம் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
