நடிகை மிர்னாளினி ரவி, இவர் ஒரு என்ஜினீயரிங் பட்டதாரி. டிக் டாக் செயலி மூலமாக தனது திறமையை காட்டி விடியோவை வெளியிட துவங்கி அதன் மூலமாக பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனவர் தான் இந்த மிர்னாலினி. இதன் மூலமாக கடந்த 2019 ஆம் ஆண்டில், இயக்குநர் “தியாகராஜன் குமாராஜா” இயக்கிய “சூப்பர் டிலக்ஸ்” படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
மேலும், இதனை தொடர்ந்து மிர்னாளினி ரவிக்கு “சாம்பியன், எனிமி” மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் வாய்ப்புகள் அதிகம் வந்தன. சமீபத்தில் வெளியான “எனிமி” படத்தில் வந்த “தும் தும்” பாடலில் மிர்னாளினி போட்ட ஆட்டம் இவரை, பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தது.
மேலும், “ஜாங்கோ, கோப்ரா” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை மிர்னாலினி. இதன் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க வண்ணம் குடியேறிவிட்டார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். வரும் காலங்களில் இவர் நெறய திரைப்படங்களில் நடிப்பார் என்று இவருடைய ரசிகர்கலால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் சமூகவலைதளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை மிர்னாலினி ரவி. அந்த வகையில் தற்போது ட்ரடிஷனல் புடவையில் தலையில் மல்லிகை பூ வைத்துக்கொண்டு முகத்தில் சிரிப்புடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மிர்னாலினி ரவி.




