‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் LGM . இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் மூலம் தல தோனி தயாரிப்பாளராக திரையுலகில் கால் பதிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை நதியா, காமெடி நடிகர் யோகிபாபு, ஆர்ஜே விஜய், தீபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வித்தியாசமான கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகிய இருவரும் கலந்துக் கொண்டு ‘LGM’ படத்தின் ஆடியோவை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனியுடன் பல முக்கிய பிரபலங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்படி இந்த விழாவில் மிர்ச்சி விஜய் மற்றும் அவரது மனைவி மோனிகாவும் தல தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
