தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். இவர் 2001ல் ஷாம் நடிப்பில் வெளியான 12B என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விசில் திரைப்படத்தில் நடித்தார். எதிர்பார்த்த அளவிற்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலையையை தொடர்ந்தார் நடிகர் சிவா.
அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 600028’ என்ற திரைப்படத்தின் மூலம் சிவாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து சரோஜா திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. பின்னர் நடிகர் சிவா ‘தமிழ் படம்’ என்ற திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். நடிகர் விமலுடன் இணைந்து சுந்தர் சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ திரைப்படத்தில் நடித்தார்.
இத்திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது எம்.எஸ் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூது கவ்வும்-2. இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படம் டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் சிங்கிள் ஆனது வரும் 13ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ட்ரைலர் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகுது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மிர்ச்சி சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மிர்ச்சி சிவா, சமீபகாலமாக இவரை இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஒப்பிட்டு பல மீம்ஸ்கள் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இரண்டு பெரும் ஒரே மாதிரி இருப்பதால் தான். இது குறித்து பேசிய மிர்ச்சி சிவா, நீங்க என்னதான் சொன்னாலும் நான் தோனி fan தான். எப்போவுமே நமக்கு CSK தான் என்று சிரித்துகொண்டே பேசியுள்ளார்.
சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஒரு விசித்திரமான இறுதிச்சடங்கு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.…
தமிழகத் தேர்தல் களம் உச்சகட்ட வெப்பத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில்,…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், கொங்கு மண்டலத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத்…
மைசூரு மாவட்டம் சரகூரு பகுதியில் உள்ள கூர்னேகால் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜவரப்பா, கடந்த சில தினங்களுக்கு முன்பு…
மனிதர்களாகிய நாம் இன்று உலகைக் காண்பதற்கு அடிப்படையாக விளங்கும் இரண்டு கண்கள், திடீரென உருவான ஓர் உறுப்பு அல்ல. ஜெர்மனியின்…
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், தேர்தல் விதிமீறல்களைத் தவிர்க்கவும் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை…