விமானத்தில் இருந்து நடுக்கடலில் விழுந்தும் உயிர் தப்பிய அதிசய சிறுமி! கேட்கவே பதைபதைப்பா இருக்குதே!

Spread the love

கார் விபத்து, பைக் விபத்து, ரயில் விபத்து போன்றவற்றில் இருந்து தப்பிப் பிழைத்த நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் விமான விபத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மிக மிக மிக அரிது. இந்த அரிதினும் அரிதில் ஒரு சிறுமிதான் பஹியா.

பிரான்ஸில் தனது தாயுடன் வசித்து வந்த 13 வயது சிறுமி பஹியா, 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது தாயாருடன் கொமோரோஸ் என்ற தேசத்துக்கு விமானத்தில் பயணித்தாள். பிரான்ஸில் இருந்து ஏமன் நாட்டிற்கு சென்று அங்கிருந்து கொமோரோஸுக்கு போக வேண்டியதாக இருந்தது. அதன் படி ஏமனில் இறங்கி அங்கிருந்து ஏமனியா ஃப்ளைட் 626 என்ற விமானத்தில் கொமோரோஸுக்கு பயணப்பட்டார்கள்.

அந்த விமானத்தில் பஹியாவோடு சேர்த்து 142 பயணிகள். 11 விமான பணியாளர்களையும் சேர்த்து 153 பேர். நள்ளிரவில் கொமோரோஸை நெருங்கிய கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பஹியா உள்ளிட்ட பலரும் தூக்கி எறியப்பட்டு நடுக்கடலுக்குள் விழுந்தனர்.

அவளுக்கு கொஞ்சம் நீச்சல் தெரிந்திருந்தாலும் உடைந்துப்போன விமான பாகம் ஒன்றை கையில் பற்றியபடி நடுக்கடலில் மிதந்துகொண்டிருந்தாள். அவள் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் உடல் முழுவதும் வலி பிண்ணி எடுத்தது. நடுக்கடலில் அவள் அலறியதோடு பல அலறல் குரல்களும் கேட்டன.

ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த அலறல் குரல்கள் அடங்கியது. இவள் மட்டும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்துகொண்டிருந்தாள். கிட்டத்தட்ட 9 மணி நேரமாக அப்படியே மிதந்துகொண்டிருந்த பஹியாவின் கண்களில் ஒரு நம்பிக்கை தென்பட்டது.

இவ்வாறு ஒரு விமானம் நடுக்கடலில் விபத்திற்குள்ளான செய்தியை அறிந்த கொமோரோஸ் அரசு, உயிருடன் யாராவது இருந்தார்கள் என்றால் அவர்களை மீட்பதற்கு ஒரு படகை அனுப்பியிருந்தது. அந்த படகில் இருந்தவர்கள் விமான விபத்தில் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றே நினைத்தனர்.

ஆனால் ஒரு சிறுமி உயிருடன் மிதந்துகொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் ஆச்சரியத்திற்குள்ளானார்கள். உடனடியாக படகில் இருந்து ஒருவர் நீருக்குள் குதித்து பஹியாவை படகுக்குள் பத்திரமாக ஏற்றினார். அந்த கோர விபத்தில் பஹியாவின் தாயாரோடு சேர்த்து 152 பேரும் இறந்துபோனார்கள். அந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி அந்த சிறுமிதான். நடுக்கடலில் விமானம் விழுந்து இதுவரை யாரும் உயிர்பிழைத்தது இல்லை, பஹியாவைத் தவிர. ஆதலால் பஹியாவை “இந்த நூற்றாண்டின் அதிசய சிறுமி” என்கின்றனர்.

Arun

Recent Posts

100 நாட்கள்… குற்றப்பத்திரிகையே இல்லை…. அன்பில் மகேஸ் கைதில் இவ்வளவு பெரிய பின்னடைவா?….. வெளியான பரபரப்பு தகவல்….!

திமுகவின் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக…

4 minutes ago

வீட்டு கதவை திறந்தது யார்?… நம்ப வைத்து கழுத்தறுத்த வேலைக்காரி… IPS அதிகாரி வீட்டில் நடந்த கொடூர கொலை.. நடுங்க வைக்கும் பின்னணி…!!

ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உயரதிகாரியின் வீட்டில் நிகழ்ந்த கொடூரக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில்,…

4 minutes ago

சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்…. 37 முக்கிய கோவில்களில் மாறிய பிரசாத முறை…. தமிழக அரசின் அதிரடி முடிவு….!

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருக்கோவில்களுக்கு நாள்தோறும் வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு, வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களின் தரம், சுகாதாரம்…

10 minutes ago

“தலைகீழாத்தான் குதிப்பேன்…. 6 மாசத்துல போதும்டா சாமி”…. விஜய் அரசைக் கிழித்து தொங்கவிட்ட வானதி சீனிவாசன்….!

பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தமிழகத்தில் தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை…

17 minutes ago

திக்.. திக்..! காதலா? அத்துமீறலா?… 13 வயது சிறுமிக்கு முத்தம்… துப்பாக்கி முனையில் நிர்வாண ஊர்வலம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

கொல்கத்தாவில் 13 வயது சிறுமியை 18 வயது இளைஞர் முத்தமிட்டதைக் கண்ட அவரது குடும்பத்தினர், இளைஞரையும் அவரது நண்பரையும் வீட்டிற்கு…

19 minutes ago

திடீர் திருப்பம்…. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த பிராமணர் சங்கம்… ஸ்தம்பித்த தமிழக அரசியல்…. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!

தமிழக அரசியல் களத்தில் புதிதாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கரங்களை நீட்டும் வகையில், தமிழ்நாடு பிராமணர் சங்கம்…

23 minutes ago