பகீர்… மைனர் மருமகளைக் கடத்தி கட்டாயத் திருமணம்… போலீசுக்கு பயந்து விஷம் கொடுத்த கணவன்… சிறுமி பரிதாப பலி…!!

By Swetha on ஆனி 23, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் தனது சொந்த 15 வயது மைனர் மருமகளை ஏமாற்றி கடத்திச் செனறுள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணமாகி, பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில், அந்த சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து, அவளது நெற்றியில் குங்குமமும் கழுத்தில் மங்கல நாணும் பூட்டியுள்ளார்.

தொடக்கத்தில் அந்த சிறுமிக்கு 20 வயது இருக்கும் என்று நினைத்து அவர் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், ஜூன் 20 அன்று சிறுமியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோதுதான், அவளுக்கு 15 வயது 8 மாதங்களே ஆகிறது என்ற உண்மை தெரியவந்தது. சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகக் கூறியதால், போக்சோ சட்டம் மற்றும் கடத்தல் வழக்கின் கீழ் தான் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும், சமுதாயத்தில் அவமானம் ஏற்படும் என்றும் அவர் பயந்துள்ளார்.

   

இந்த சட்ட ரீதியான நடவடிக்கை மற்றும் அவமானத்திற்கு பயந்த அவர், ஞாயிற்றுக்கிழமை கிராமத்திற்குத் திரும்பும் வழியில் பந்தானா சாலை அருகே தங்களது பைக்கை நிறுத்தி, சிறுமிக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தியுள்ளார். அந்த வழியாகச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இருவரும் மீட்கப்பட்டு கந்வா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்; குற்றவாளியான அந்த நபரின் நிலைமை தற்போதும் கவலைக்கிடமாக உள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் இது கொலை என்று குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.