அகமதாபாத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகின்றது. தாய்மார்களின் இதயத்தை உறைய வைக்கும் இந்த காட்சியை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அகமதாபாத்தின் ஷிவ் பங்களாஸ் பகுதியில் நடந்த இந்த விபத்தில் ஒரு மைனர் சிறுவன் கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது தன்னுடைய வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி மீது நேரடியாக மோதியுள்ளார். கார் மோதியதும் சிறுமி காரின் அடியில் சிக்கி சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டார். இந்த தருணத்தை கண்டால் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் நடந்த சில நொடிகளில் சிறுமி காரின் அடியில் இருந்து மெதுவாக ஊர்ந்து வெளியே வந்து எதுவும் நடக்காதது போல வீட்டை நோக்கி நடந்து சென்றார். இதனைப் பார்த்து அனைவருமே நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமிக்கு எந்தவித காயம் முன் ஏற்படவில்லை என்பது பலரையும் வியக்க வைத்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமியின் தாய் தனது கோபத்தை அடைக்க முடியாமல் அந்த சிறுவனை கன்னத்தில் அறைந்து உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவன் கார் உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதை உறுதி செய்த விசாரித்து வருகிறார்கள். இந்த நிகழ்வு பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் ஒரு பெரிய எச்சரிக்கையாகும். சிறுவர்களின் கையில் வாகனத்தின் சாவியை கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
#Ahmedabad🚨⚠️ Disturbing Visuals
“Minor Boy” driving Swift without Rear Number Plate runover 3 year old. 3 year old escaped luckily. 🙏
Age Group 14-17 responsible for max misadventures…@DriveSmart_IN @dabir @uneaz @InfraEye
pic.twitter.com/Sv0uBlzo6g— Dave (Road Safety: City & Highways) (@motordave2) October 29, 2025
