நாய்கள் கடித்துக் குதறிய பிணம்… மினி வேன் ஸ்டிக்கர் கொடுத்த க்ளூ… டெல்லி கொலையின் திடுக்கிடும் பின்னணி…. 72 மணி நேரத்தில் அம்பலமான பகீர் உண்மை….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

டெல்லியின் சுவரூப் நகர் அருகே உள்ள வயல்வெளியில், நாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் சிறுமி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர். உடற்கூறாய்வு பரிசோதனையில், அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சிறுமியின் முகம் மற்றும் உடல் கடுமையாகச் சிதைக்கப்பட்டிருந்த நிலையில், சுற்றுவட்டாரக் காவல் நிலையங்களில் சிறுமி காணாமல் போனதாக எந்தப் புகாரும் பதிவாகாததால், காவல்துறையினருக்கு வழக்கின் தொடக்கத்தில் பெரும் குழப்பம் நிலவியது.

இக்கொடூரச் சம்பவத்திற்குத் தீர்வு காண அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த மாலையில், சிறுமி பிணமாகக் கிடந்த பகுதிக்குச் சென்ற ஒரு மினி வேனை அதன் ஸ்டிக்கர் மூலம் காவல்துறையினர் அடையாளம் கண்டனர். அந்த வாகனத்தின் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தபோது, சம்பவத்தன்று அச்சிறுமி மற்றும் 4 இளைஞர்களைத் தான் அந்த வயல்வெளிக்கு அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

   

இதனடிப்படையில், சிவம் என்கிற சுதாமா (19) மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், கைதானவர்களில் ஒருவர் அச்சிறுமியின் காதலன் என்பதும், காதலனுடன் வயல்வெளிக்குச் சென்ற சிறுமியுடன் அனைவரும் சேர்ந்து மது அருந்தியதும் தெரியவந்தது. தொடர்ந்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்தை வெளியே சொல்லிவிடுவதாக அவர் மிரட்டியதால், 4 பேரும் சேர்ந்து அவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். குற்றவாளிகளிடமிருந்து 2 கத்திகள் மற்றும் இரத்தக்கறை படிந்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இக்கொலை வழக்கைச் சித்தரித்து 72 மணி நேரத்திற்குள் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த காவல் குழுவினரை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.