நீண்ட நேரமாக திறக்கப்படாத கதவு… பூட்டிய வீட்டுக்குள் உடல் கருகியின் சடலமாகக் கிடந்த மந்திரியின் மருமகள், கணவர்… பெரும் பரபரப்பு சம்பவம்..!

By Srimathi on ஆவணி 30, 2025

Spread the love

கேரள வனத்துறை மந்திரி ஏ.கே.சசிந்திரனின் அக்கா மகள் ஸ்ரீலேகா (68), கணவர் பிரேமராஜன் (76). பிரேமராஜன் கண்ணூரில் பிரபல ஓட்டல் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் மகன்கள் பிரபித், சிபின் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சிபின் வெளிநாட்டிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு வருவதாக தெரிவித்தார். அவரை அழைத்து வருவதற்காக பிரேமராஜன் டிரைவர் சுரேஷ், பிரேமராஜின் வீட்டிற்கு கார் எடுக்க சென்றுள்ளார். வீட்டின் கதவை பலமுறை தட்டி பார்த்தும், கதவு திறக்கப்படவில்லை என்றவுடன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

உள்லே சென்று பார்த்த பொழுது, அங்கே ஸ்ரீலேகா & பிரேமாராஜான் இருவரும் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீலேகாவை, பிரேமாராஜான் அடித்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உண்மையான காரணம் என்ன? என தெரியவரும் என்று கூறினார்.