“லிஸ்ட் ரெடி”…. அமைச்சர்கள் வாங்கும் ரகசிய பட்டியலை கையில் வைத்திருக்கும் நயினார் நாகேந்திரன்…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் விமர்சனம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசு அமைந்த முதல் 100 நாட்கள் மக்களுக்கு மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் மட்டுமே தந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

அமைச்சர்கள் அனைவரும் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்த அவர், யார் யார் எந்தெந்த வழிகளில் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்ற முழுமையான பட்டியல் தங்கள் வசம் இருப்பதாக எச்சரித்துள்ளார். விரைவில் அந்த விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு அரசாங்கத்தின் உண்மையான முகத்தைத் தோலுரிப்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.