ஈரோட்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் மறைமுகமாகக் கிண்டல் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய்யின் தோளைத் தட்டிக் கொடுத்து, “நீங்கள் சிறந்த அரசை நடத்துகிறீர்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியதாகக் சுட்டிக்காட்டிய அவர், ஆளுங்கட்சியின் சாதனைகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
சட்டமன்றத்தில் பாட்டு பாடுவதைக் கிண்டல் செய்யும் எதிர்க்கட்சியினருக்குப் பதிலடி தரும் வகையில் பேசிய செங்கோட்டையன், “வீட்டில் எத்தனை பேர் அதை ரசிக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இல்லை என்றால் கதை முடிந்திருக்கும்” எனக் குறிப்பிட்டார். மேலும், “சொன்னால் வருத்தப்படுவீர்கள், இரண்டு பேரும் தப்பித்து வந்துவிட்டீர்கள். ஒருத்தர் நம்ம ஆளை விலைக்கு வாங்கித் தப்பித்தாரு; இன்னொருத்தருக்கு சேப்பாக்கத்தில இருக்கிற இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் மனசு மாறிட்டாங்க, இல்லைன்னா கதை முடிஞ்சிருக்கும்” என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரின் அரசியல் நகர்வுகளையும் சாடினார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவரோ, துணைத் தலைவரோ இல்லாத சூழலைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் நினைப்பதே நடக்கும் என்றும் உறுதியளித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கொடிவேரி அணைப் பகுதியை முக்கியச் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், மக்களின் விருப்பங்களை முதல்வரிடம் எடுத்துரைத்து நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும் கூறினார்.
கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் கண்டு 107 தொகுதிகளைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக மற்றும் பாஜக, பாமக உள்ளிட்டக் கட்சிகளுடன் களமிறங்கிய அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட முன்னணிகளையும் வீழ்த்தி, தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…