“CM விஜய்க்கு தைரியம் இல்லையா?”…. சட்டப்பேரவையில் சைலன்ட்… இணையத்தில் வையலன்ட்…. CM விஜய்யை வம்புக்கிழுக்கும் திமுக… தூக்கி அடிக்கும் தவெக….!

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இணையதளங்களில் திமுக மற்றும் தவெக ஆதரவாளர்களிடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. முதலமைச்சர் கவனித்து வரும் நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய இலாகாக்கள் தொடர்பான கேள்விகளுக்கு, அவையில் அவரே நேரடியாகப் பதிலளிக்காமல் பொறுப்பு அமைச்சர்கள் பதிலளிப்பதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். முதலமைச்சர் பேரவையில் இருக்கும்போதே பிற அமைச்சர்கள் அவரது துறைகளுக்குப் பொறுப்பேற்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் கூறி, சமூக வலைதளங்களில் திமுகவினர் காரசாரமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

திமுகவினரின் இந்த விமர்சனங்களுக்கு தவெக தரப்பில் இருந்து கடுமையான பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்வசம் வைத்திருந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடர்பான விவாதங்களில் பங்கேற்காமல், அப்போதைய சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கீதா ஜீவனே முழுமையாகப் பதிலளித்தார் என்பதை தவெகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். “அன்று எழாத கேள்விகளும் சந்தேகங்களும் இன்று மட்டும் ஏன் திடீரென எழுகின்றன?” எனக் கேள்வி எழுப்பும் தவெகவினர், எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே அரசியலாக்குவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த ஒப்பீட்டை மறுத்துள்ள திமுகவினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்பது சமூக நலத்துறையோடு இயல்பாகவே பிணைக்கப்பட்ட ஒன்று என்றும், ஆனால் நகராட்சி நிர்வாகத் துறை அவ்வாறு இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், “கடந்த காலத்தில் ஏன் கேட்கவில்லை?” என்று கேள்வி எழுப்புவது, தங்களது நிர்வாகக் குறைபாடுகளை மறைக்கத் துடிக்கும் தவறு செய்தவர்களின் குறுகிய காலத் தப்பித்தல் வழி என்றும் திமுகவினர் பிரசாரங்களை முன்வைத்துச் சாடி வருகின்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் களமிறங்கியுள்ள தவெகவினர், இரு துறைகளும் பிணைந்தது என்றால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை முழுமையாகவே கீதா ஜீவனிடம் ஒப்படைத்திருக்கலாமே என்று வினா எழுப்புகின்றனர். விளம்பரத்திற்காக மட்டுமே ஸ்டாலின் அத்துறையைத் தன்வசம் வைத்திருந்தாரா என்றும், தங்களது நிர்வாக ரீதியான தவறுகளையும் அடாவடி அரசியலையும் உணராமல் செயல்பட்டதால்தான் கடந்த தேர்தலில் திமுக தலைவர் தோல்வியைத் தழுவினார் என்பதையும் திமுகவினர் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை என்றும் தவெகவினர் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

6 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

17 minutes ago

ஐயோ கடவுளே… ஒரு செகண்ட்ல எல்லாம் போச்சே… காதலன் கண்முன்னே ஏழாவது மாடியிலிருந்து… கீழே விழுந்த இரண்டு குழந்தைகளின் தாய்… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…

35 minutes ago

அதிர்ச்சி… பட்டப்பகலில் அரங்கேறிய குண்டாந்தடி தாக்குதல்… நீதியை மூடி மறைக்கிறதா காவல்துறை?… ஆக்ராவை உலுக்கும் அரசியல் அராஜகம்…!

ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…

51 minutes ago

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

59 minutes ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

1 மணத்தியாலம் ago