BREAKING: காய்ச்சல், வாந்தி, மயக்கம்… தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர் செங்கோட்டையன்… ஷாக் நியூஸ்….!

By Nanthini on வைகாசி 24, 2026

Spread the love

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கத்தால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசியல் களத்தில் தொடர்ந்து ஓய்வின்றி தீவிரமாகச் செயலாற்றி வந்ததால், அவருக்கு கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்சமயம் அவரது உடல்நிலை சீராகவும், ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியும் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.