சொந்த பாஸ்போர்ட்டில் ரகசிய பயணம்… நள்ளிரவில் வந்த டெல்லி நோட்டீஸ்… ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது பாயும் ஒழுங்கு நடவடிக்கை… அதிரடி காட்டும் மத்திய அரசு…!

Spread the love

தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் செல்வி கீர்த்தனா மற்றும் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அரசு முறைப் பயணம் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் என்ற பெயரில், துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் தங்களது தனி உதவியாளர்கள் புடைசூழ இவர்கள் வெளிநாடு சென்று திரும்பியுள்ளனர். ஆனால், இந்த ஒட்டுமொத்தப் பயணமும் தற்போது மிகப்பெரிய சட்டச் சிக்கலிலும், விதிமீறல் புகாரிலும் சிக்கி கோட்டை வட்டாரத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

மாநில அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்பதும், ‘டிப்ளமேடிக் பாஸ்போர்ட்’ மூலமாகவே பயணிக்க வேண்டும் என்பதும் கட்டாய விதியாகும். ஆனால், இந்த விவகாரத்தில் இரு அமைச்சர்களுமே மத்திய அரசின் எவ்வித முன் அனுமதியும் பெறாமல், தங்களது சொந்த பாஸ்போர்ட் மூலமாக வெளிநாடு சென்று வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அப்பட்டமான விதிமுறை மீறலைக் கடுமையான குற்றச்சாட்டாகக் கையில் எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு அதிரடியாக ‘ஷோ காஸ்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் இந்த அதிரடி நோட்டீஸால், டெல்லிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் தற்போது திகைத்துப்போயுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு விதிகள் தெரியாமல் போனாலும், நிர்வாகத்தை நடத்தும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாவது இதனைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டாமா என்ற கேள்வி டெல்லியில் பலமாக எழுந்துள்ளதோடு, விதிமீறலுக்குத் துணைபோன அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனால், இந்தச் சட்டச் சிக்கலில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Visaka

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago