ஷாக்… DMK தூங்கிக் கொண்டு இருந்தார்களா?… பஞ்ச் பேசினார்களே?… கோயில் நில முறைகேடு வழக்கில்… அமைச்சர் ரமேஷ் அதிரடி தாக்குதல்…!

By Swetha on ஆவணி 9, 2026

Spread the love

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கிழக்கு வாசல் கோபுர நுழைவுவாயில், சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திறந்து வைத்தார். நிர்வாகக் காரணங்களால் தாமதமான இப்பணிகள் குறித்துப் பேசிய அவர், கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தாமதத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களே பதிலளிக்க வேண்டும் என்றார். மேலும், கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு நீதிமன்றத் தடை உள்ள நிலையில், அதைக் முறையாகச் செயல்படுத்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் முதன்மை திருக்கோயில்களில் ‘மொபைல் கவுண்டர்கள்’ அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

கோயில் நில முறைகேடுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், முன்னோர்கள் தர்ம காரியங்களுக்காக அறக்கட்டளைகளுக்கு அளித்த நிலங்கள், அறநிலையத்துறைக்குத் தெரியாமல் தவறாகப் பத்திரப்பதிவு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற புகார்கள் கவனத்திற்கு வந்தவுடனேயே அரசு சட்டரீதியான உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்தார். தவறுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதே சரியான நிர்வாக நடைமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

   

கடந்த ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான அறக்கட்டளை நிலத்தை தனிநபர்கள் பெயரில் பதிவிறக்கம் செய்ய முயன்ற விவகாரத்தில், கடந்த 5 ஆண்டுகளாக முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததா எனக் கேள்வி எழுப்பினார். ஆன்மீகத்தைக் காப்பதாகப் பேசியவர்கள் ஏன் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாடிய அமைச்சர், தற்போது அந்த வழக்கில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.