சிந்துபாத் கதை போல வன்மம்… கம்யூனிஸ்ட் தலைவரை விமர்சித்த முரசொலி… கொதித்தெழுந்த அமைச்சர் ராஜ்மோகன்..!

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது ‘முரசொலி’ நாளிதழின் தொடர் கட்டுரைகளாலும், அதற்கு ஆளுங்கட்சியான த.வெ.க மற்றும் கம்யூனிஸ்ட் தரப்பில் இருந்து வரும் எதிர்வினைகளாலும் சூடேறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகத்தின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்து, முரசொலியில் ப. திருமாவேலன் ‘பெ.சண்முகத்தின் உண்மை முகம்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார். விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்ததை விமர்சிக்கும் வகையில் அமைந்த இந்தக் கட்டுரைகள், தற்போது இருதரப்புக்கும் இடையே பெரும் வார்த்தைப் போராக மாறியுள்ளது.

முரசொலியின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள பெ. சண்முகம், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளைப் போல கொள்கை இல்லாத நிலைப்பாடு சி.பி.ஐ (எம்) கட்சிக்கு எப்போதும் கிடையாது என்று தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் சாடியுள்ளார். மேலும், காவிரி மற்றும் மேகேதாட்டு அணை போன்ற முக்கியமான மாநிலப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை உருவாக்காமல், தி.மு.க தன்னிச்சையாகச் செயல்பட்டதே தற்போதைய குழப்பங்களுக்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் நலனை மறைத்துவிட்டு, தங்களைக் குறை கூறுவது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சூழலில், சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், முரசொலியின் விமர்சனங்களுக்கு மிகவும் காட்டமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ. சண்முகம் குறித்து எழுதப்பட்டிருப்பது அநாகரிகத்தின் உச்சம் என்று சாடிய அவர், “தனது வாழ்வையும் வசதியையும் ஏழை, எளிய மக்களுக்காக அர்ப்பணித்த ஒரு மாமனிதரை, தி.மு.க-வினர் தங்களைப் போல ‘டாஸ்மாக் டானிக்’ குடித்து வளர்ந்தவர் என்று இவ்வளவு மோசமாக விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கொதித்துள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மறைந்த தலைவர் கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இந்த அநாகரிகமான அரசியல் விமர்சனத்தை நிச்சயம் வன்மையாகக் கண்டித்திருப்பார் என்று குறிப்பிட்டார். அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகத்தோடு பெ.சண்முகத்தை ஒப்பிட்டு முரசொலி வன்மத்தைக் கக்குவதாகக் குற்றம் சாட்டிய அவர், த.வெ.க சார்பில் இதற்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். “கம்யூனிஸ்டுகளின் சிவப்பு துண்டை இதுபோல சிறுமைப்படுத்தினால், த.வெ.க-வின் அடையாளமான இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது” என்று எச்சரித்துள்ள அமைச்சர், அனைவரும் அரசியல் நாகரிக எல்லைக்குள் நின்று செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

SATHISH R

Recent Posts

ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…

5 minutes ago

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

6 minutes ago

“அந்த வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவோம்” காதலனுடன் தனிமையில் இருந்ததை தோழியிடம் சொன்ன கல்லூரி மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச்…

10 minutes ago

“1 ரூபாய்க்கு டிரஸ்.. மல்லுக்கட்டிய மக்கள்” மாலில் நள்ளிரவு முதல் விடிய விடிய பரபரப்பு… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!

மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…

13 minutes ago

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

51 minutes ago

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

55 minutes ago