இனி அமைச்சரை பார்க்க ‘நோ’ வெயிட்டிங்… தமிழக வரலாற்றிலேயே முதல்முறை…. அமைச்சர் ராஜ்மோகன் அறிமுகப்படுத்திய புதிய டெக்னாலஜி….!

Spread the love

தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பதில் பொதுமக்களுக்கு இருந்து வந்த நீண்ட நேர காத்திருப்பு, கூட்ட நெரிசல் மற்றும் முன்பதிவு சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் அலுவலகத்தில் தினமும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த சவாலான நிலையை மாற்றி, மக்கள் எளிதாக அமைச்சரை அணுகும் வகையில் தலைமைச் செயலக வரலாற்றிலேயே முதல்முறையாக க்யூஆர் குறியீடு மூலம் நேரம் ஒதுக்கும் நவீன வசதி தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தவர்கள் தங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை க்யூஆர் குறியீடு மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதியை அமைச்சர் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த முயற்சிக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது சந்திப்பு நேரத்தை முறைப்படுத்தும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சரின் அறைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள சிறப்பு க்யூஆர் குறியீட்டை பொதுமக்கள் தங்களின் செல்போன் மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம், இந்த புதிய டிஜிட்டல் சேவை தடையின்றி செயல்படத் தொடங்குகிறது.

இதன் செயல்பாட்டு முறை மிகவும் எளிமையானதாகும். க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன் திறக்கப்படும் இணையதளத்தில், சந்திக்க விரும்பும் நபர் தனது பெயர், முகவரி, கைப்பேசி எண் மற்றும் கோரிக்கையின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, கைப்பேசிக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை உள்ளிட்டு விண்ணப்பத்தை உறுதி செய்தவுடன், அமைச்சரை எந்த நாள் மற்றும் எந்த நேரத்தில் சந்திக்கலாம் என்ற விவரம் குறுந்தகவலாக (SMS) அனுப்பப்படும். இந்த வசதியால் பொதுமக்கள் தலைமைச் செயலகத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் வந்து அமைச்சரைச் சந்தித்து மனுக்களை அளிக்க முடியும்.

தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், அண்மையில் தன்னை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய ஒருவரின் வருத்தம் தனது மனதை பாதித்ததாகவும், அதனாலேயே மென்பொருள் நிபுணர்களுடன் ஆலோசித்து இந்தத் திட்டத்தை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை நாடி வரும் ஒரு நபர் கூட ஏமாற்றத்துடன் திரும்பக் கூடாது என்பதே தனது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் எளிமையையும் கொண்டு வரும் இந்த க்யூஆர் குறியீடு சேவை வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் மற்ற அமைச்சர்களின் அலுவலகங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

3 minutes ago

வைகோ Vs திருமாவளவன்… தவெக கூட்டணியின் ‘அந்த’ முக்கிய பதவி யாருக்கு?… CM விஜய் எடுக்கும் அதிரடி முடிவு… தவெக வில் நடக்கும் ரகசிய யுத்தம்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…

3 minutes ago

சிபிஐ கையில் இருக்கும் வழக்கை கையில் எடுத்த திமுக.. அடுத்த விக்கெட் இவர்தானா?…. ஆதவ் அர்ஜுனாவின் ஒற்றை பேச்சால் ஆடிப்போன தமிழக அரசியல்…..!

கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…

9 minutes ago

போடு ரகிட ரகிட… இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…

21 minutes ago

21 வயது பெண்ணின் மாடலிங் ஆசை… Whatsappல் வந்த அந்த ஒரு லிங்க்… சைபர் சைக்கோ செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!

பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…

25 minutes ago

அரசியல் வரலாற்றிலேயே முதல்முறை…. CM விஜய் கையில் எடுத்த புது ஆயுதம்… இனி ஒரு போன் கால் போதும்…. ஷாக்கில் எதிர்க்கட்சிகள்…!

பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் விஜய் ஒரு புதிய பிரத்யேக…

31 minutes ago