சிவப்பு துண்டை சிறுமைப்படுத்த நினைத்தால்.. இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது… முரசொலி கட்டுரைக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்..!!

By Soundarya on ஆனி 26, 2026

Spread the love

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பெ. சண்முகம் குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரைக்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பெ. சண்முகத்தின் வாழ்நாள் தியாகத்தையும், அவர் ஆற்றிய சமூகப் பணிகளையும் இழிவுபடுத்தும் வகையிலான இத்தகைய போக்குகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைக்கும்போது குறைந்தபட்ச அரசியல் நாகரிகமும், எல்லையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியான இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இடதுசாரிகளின் அரசியல் வலிமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “சிவப்பு துண்டை சிறுமைப்படுத்த நினைத்தால், இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது” என்று எச்சரித்துள்ள அமைச்சர், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளங்களையும் தலைவர்களையும் குறைத்து மதிப்பிடுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த ஆவேசமான அறிக்கை தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.