விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் நிறைந்திருப்பதால், தணிக்கைக் குழு இப்படத்திற்கு ‘ஏ’ (18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும்) சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் இப்படத்தைத் திரையரங்குகளில் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக அமைச்சர் ராஜீவ், விதிகளைப் பொருட்படுத்தாமல் தனது 2 மைனர் குழந்தைகளைத் திரையரங்கிற்கு அழைத்துச் சென்று படம் பார்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மருத்துவராகவும் அமைச்சராகவும் இருக்கும் ராஜீவ், சட்ட விதிகளை மீறிச் செயல்பட்டதற்கும், 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை அனுமதித்த திரையரங்க நிர்வாகத்திற்கும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரையரங்கக் காட்சிக்குச் சிறுவர்களை அழைத்துச் சென்றது விதிமீறல் என விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. ஏற்கனவே திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக அமைச்சர் ஃபர்வேஸ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.
