மக்களே… தினமும் பழைய சோறு சாப்பிடுங்க… உடல் பருமன் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் தடுக்கலாம்… ஹெல்த் மினிஸ்டர் கொடுக்கும் டிப்ஸ்…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

தினமும் பழைய சோறு சாப்பிட்டால் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம், குறை பிரசவத்தையும் தவிர்க்கலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழைய சோறு குறித்து அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி துறையில் கடந்த 5 வருடங்களாக மருத்துவர் ஜெஸ்வந்த் தீவிர முயற்சியின் காரணமாக பழைய சோறு பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பழைய சோறில் பல்வேறு சத்துக்களும் நல்ல பாக்டீரியாக்களும் நூல் சத்துக்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தினம்தோறும் பழைய சோறு சாப்பிடுவதால் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். குடலின் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் தவிர்க்கலாம். கர்ப்பிணிகள் பழைய சோறு சாப்பிடுவதால் குழந்தை நன்றாக வளரும். குறை பிரசவம், கர்ப்பகால நீரிழிவு, அதிக உயர் ரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கின்றது. இதய நோயில் இருந்தும் பாதுகாக்கிறது. ரத்த கொழுப்பு அளவுகளை குறைக்கின்றது.

   

கல்லீரல் இருக்கும் கெட்ட கொழுப்புகள் மற்றும் ஆபத்தான அமிலங்களை கல்லீரலில் இருந்து வெளியேற்ற உதவுகின்றது. அதிக வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு குடலில் ஓர் அரணாக இருந்து நுண்ச்சத்துக்கள் மற்றும் நீர் சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாக்கும். வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வீக்கம் போன்ற நோய்களிலிருந்து குணமாகவும் உதவுகின்றது. உடல் நலத்திற்கு பாதுகாப்பான மிகச்சிறந்த உணவாக பழைய சோறு உள்ளது. பழைய சோறு தினம் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.