“கீர்த்தனா, ஜெகதீஸ்வரி டூ கில்லி சரத்”…. 60 நாட்களில் தவெக ஆட்சியை உலுக்கிய 3 முக்கிய சர்ச்சைகள்… கோபத்தின் உச்சத்துக்கே சென்ற விஜய் எடுத்த விபரீத முடிவு….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, 17-வது சட்டப்பேரவையின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நடிகர் விஜய்க்கு, பதவி ஏற்ற 60 நாட்களிலேயே சொந்த அமைச்சரவை சகாக்களால் தொடர் தலைவலிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. சீனியர் தலைவர் செங்கோட்டையனைத் தவிர்த்து, விஜய்யின் அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் புதுமுகங்கள் என்பதால், அதிகாரத்திற்கு வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவெக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி இடையே அரசு நிகழ்ச்சிகளில் முன்னுரிமை பெறுவதில் எழுந்த ‘யார் பெரியவர்?’ என்ற மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் புகையைக் கிளப்பியது. பின்னர் இருவரும் ஒன்றாகச் செல்ஃபி எடுத்து அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், அதற்குள் அடுத்தடுத்த புதிய புயல்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

தற்போது தவெக அரசை உலுக்கி வரும் மிக முக்கிய விவகாரம், அமைச்சர் ஜெகதீஸ்வரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதுதான். தென்மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவருடன் அமைச்சருக்கு என்ன தொடர்பு என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜெகதீஸ்வரி, தான் பத்திரிகையாளராகப் பணியாற்றிய காலத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் இது என்று விளக்கமளித்துள்ளார். இருப்பினும், இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழைய படம் என்று கூறி தப்பிக்கப் பார்க்கிறார் அமைச்சர் என திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே அரசுப் பள்ளியில் ரீல்ஸ் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனாவைத் தொடர்ந்து, தற்போது ஜெகதீஸ்வரியும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருப்பது கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மறுபுறம், விளையாட்டுத் துறை அமைச்சர் கில்லி சரத் ஐபிஎல் போட்டியின் போது ஏடிஎம் கார்டு மூலம் போதைப்பொருள் போன்ற ஒரு வெள்ளை நிறப் பொருளைப் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த திமுக மாணவரணி, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனப் போராட்டங்களில் குதித்தது. ஆனால், தவெக தரப்போ தனது மகனுக்கு உடல்நலம் சரியில்லாத போது பாரசிட்டமால் மாத்திரையைப் பொடியாக்கித் தந்த காட்சியை யாரோ தவறாகச் சித்தரித்து பரப்பிவிட்டதாகத் தெரிவித்தது. இதுமட்டுமன்றி, மற்றொரு அமைச்சர் விஜய் பாலாஜி கடற்கரையில் மதுபானக் கோப்பையுடன் உலா வரும் காட்சிகளும் வெளியாகி, தவெக அமைச்சர்களின் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் நூறு நாட்களைக் கூடத் தாண்டாத நிலையில், தன் மீது மக்கள் வைத்திருக்கும் நற்பெயருக்கு அமைச்சர்களின் இந்த அடுக்கடுக்கான சேட்டைகள் கலங்கம் விளைவிப்பதாக முதலமைச்சர் விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சியின் ஒழுக்கத்திற்கும் மாண்பிற்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அமைச்சர்களுக்குக் கடிவாளம் போட அவர் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டமாக, இன்னும் சில தினங்களில் சர்ச்சைக்குரிய சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

9 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

12 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

12 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

26 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

44 minutes ago