இனி பேனர் வச்சா அவ்வளவுதான்… உடனே தூக்குங்க…. மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் போட்ட உத்தரவு…!

Spread the love

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையைத் தொடர்ந்து, சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜய் பாலாஜி, மழைக்காலங்களில் பேனர்கள் மற்றும் பிளெக்ஸ் போர்டுகளால் பொதுமக்களுக்குப் பல்வேறு விபத்துகளும் அசௌகரியங்களும் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டினார். இதனால், எந்தப் பகுதியில் யார் பேனர் வைத்திருந்தாலும் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், வரும் மூன்று மாதங்களுக்கு நகரம் முழுவதும் எந்த இடத்திலும் பேனர்கள் இல்லாதவாறு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மழைநீர் வடிகால்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ஒருமுறைக்கு இருமுறை உரிய எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்த மாமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் பணிகளை அதிகாரிகள் எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர், கவுன்சிலர்களின் வார்டு நிதி தொடர்பான பிரச்சினைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இத்தகைய தீவிர நடவடிக்கை பருவமழைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

அவனை விட்ருங்கடா… காதலனுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு… ஓடிய திருமணமான பெண்… கணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி… டெல்லியில் பரபரப்பு சம்பவம்…!

டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…

10 minutes ago

ஐயோ பாவம்… காதல் ஜோடிக்கு உதவியதற்காகக் காவு வாங்கிய பகை… விநாயகர் மண்டபத்தில் வாலிபர் படுகொலை… ஹைதராபாத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…

21 minutes ago

“எளிமையின் உச்சம்…” அபுதாபி இளவரசர் ஷேக் காலித்தின் செயலால் இணையத்தில் குவியும் பாராட்டுகள்… நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…

22 minutes ago

வேற யாரையும் என்னால… நினைச்சுக்கூட பார்க்க முடியாது… குடும்பத்தை எதிர்த்து காளுவை… கரம்பிடித்த பணக்கார பெண்… வைரலாகும் காதல் சம்பவம்…!

குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…

31 minutes ago

Breaking: பட்டப்பகலில் பயங்கரம்… டாஸ்மாக்கில் இளைஞர் கழுத்தறுத்து கொடூரக் கொலை…!!

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…

37 minutes ago

அய்யய்யோ… சாலையில் தனியாக நின்ற 12 வயது சிறுமி… காரை நிறுத்தி விசாரித்த நபருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன?… இணையத்தில் வைரல்…!

அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…

53 minutes ago